வாடிவாசல் படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அப்டேட்..!

 
வெற்றிமாறன் மற்றும் சூர்யா

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூரி நடித்து வரும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார் வெற்றிமாறன். கொரோனா காரணமாக இந்த படத்தின் பணிகள் தாமதமாகி வருகின்றன. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் ஜி.வி. பிரகாஷ் குமாரை டேக் செய்த ரசிகர் ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட்டை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஜி.வி. பிரகாஷ், தற்போது அந்த படத்தை பற்றி பேசுவது மிகவும் சீக்கரமாகும். விரைவிலேயே நீங்கள் எதிர்பார்க்காத அப்டேட் உங்களுக்கு கிடைக்கும். அதுவரை காத்திருக்கவும் என்று தெரிவித்துள்ளார்.
 

From Around the web