உண்மைச் சம்பவத்தை தழுவிய கதையில் ஜி.வி பிரகாஷ்..?

 
1

ஜிவி பிரகாஷ் ரிபெல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் தான் இதில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் சி வி குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிபெல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ரிபெல் படம் வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி ரிபெல் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. ஜிவி பிரகாஷின் திரைவாழ்வில் இது முக்கிய திரைப்படமாக இருக்கும் எனவும், தேயிலை தோட்ட ஊழியர்களின் போராட்டத்தை மையப்படுத்திய உண்மை சம்பவத்தை தழுவி படம் உருவாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

From Around the web