ஹெச். வினோத்துடன் கூட்டணி: உறுதிசெய்த கமல்ஹாசன்...!!

 
1

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல ஹெச். வினோத் இயக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான படம் விக்ரம். அதிரிபுதிரி ஹிட்டடித்த இப்படம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் மிகுந்த உச்சத்துக்கு சென்றார் கமல்ஹாசன்.

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்குவார் என்று கூறப்பட்டது. அதற்கான பல்வேறு அப்டேட்டுகள் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வந்தன.

இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போல கமல்ஹாசன் நடிக்கும் அவருடைய 233-வது படத்தை ஹெ. வினோத் இயக்குகிறார். அதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

தற்போதைக்கு கே.எச் 233 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை கமல்ஹாசனே தனது ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் மூலமாக தயாரிக்கிறார். "ஆட்சிக்கான உரிமை" என்கிற டேக்லைன் இடம்பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசன் கையில் ஒரு தீபந்தம் உள்ளது.

கமல்ஹாசன் நிர்வகித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் டார்ச்லைட் ஆகும். அதனால் இப்படம் அவருடைய அரசியல் பார்வையை முன்வைக்கும் படமாக தயாராக வாய்ப்புள்ளதாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


 


 

From Around the web