ஹெச். வினோத் இயக்கத்தில் ஹீரோவாகும் யோகி பாபு- அப்போ கமல்ஹாசன்..!!
 

தற்போது கமல்ஹாசன் சகட்டுமேனிக்கு புதிய படங்களை வரிசையாக ஒப்பந்தம் செய்து வருவதால், ஹெச். வினோத் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
yogi babu

தமிழில் சதுரங்க வேட்டை படம் மூலம் கவனமீர்த்த ஹெச். வினோத், கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய 3 படங்களிஅ இயக்கிவிட்டார். இவருடைய அடுத்த படத்தின் மீது ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். 

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தை கமலை வைத்து இயக்கவுள்ளார் என்றும், அது விவசாயி மற்றும் விவாசயத்துறையை மையப்படுத்திய படமாக உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்யும் விதமாக ஹெச். வினோத் மற்றும் கமல்ஹாசன் சேர்ந்து விவசாய சங்க உறுப்பினர்களைச் சந்தித்தனர். மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு இருவரும் இணைந்து பயணித்ததாகவும் தெரியவந்துள்ளது.

h vinoth

எனினும், இவர்களுடைய கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கும் கே.எச். 234, பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் புரோஜெக்ட் கே படத்தில் வில்லன் வேடம், வெற்றிமாறனின் படம் உள்ளிட்ட படங்களை ஓகே செய்து வைத்துள்ளார்.  இதற்கிடையில் பிக்பாஸ் தமிழின் புதிய சீசனையும் அவர் தொகுத்து வழங்கவுள்ளார். இதனால் ஹெச். வினோத் மற்றும் கமல்ஹாசன் இணையும் படம் தாமதமாகும் என்று தெரியவந்துள்ளது.

அதற்கு முன்னதாக யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளார். அதற்காக யோகி பாபுவிடம் பேசி சம்மதம் பெற்றுவிட்டாரம். அத்துடன் தனுஷிடமும் ஒரு கதையை சொல்லி ஓகே செய்து வைத்துள்ளாராம் ஹெச். வினோத். ஆனால் அவர் கமல்ஹாசனை விடவும் பிஸியாக இருப்பதால், இருவரும் இணைந்து பணியாற்றுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தகவல்கள் கூறப்படுகின்றன.

From Around the web