அரைமணி நேரம் என்றால் ரூ. 2 லட்சம், 1 மணி நேரம் என்றால்...

 
1

பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் அனுராக் காஷ்யப், தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்திருந்தார். நயன்தாராவை டார்ச்சர் செய்யும் மிரட்டலான வில்லனாக நடித்து இப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திருந்தார். யாரு சாமி நீ என்னும் அளவிற்கு அனுராக்கின் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருந்தது. அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜின் 'லியோ' படத்தில் டம்மியாக ஒரு சின்ன சீனில் நடத்திருந்தார்.

தற்போது 'கென்னடி' என்ற படத்தை இயக்கியுள்ளார். ராகுல், சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கீரினிங் என்னும் பிரிவில் திரைப்படப்பட்டது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இந்நிலையில் தன்னை சந்திக்க விரும்புவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அனுராக் காஷ்யப். இதுதொடர்பாக அவரது பதிவில், புதியவர்கள் உதவ நிறைய நேரத்தை வீணாக்கியுள்ளேன். அவை எல்லாம் பெரும்பாலும் முட்டாள் தனமாகவே முடிந்துள்ளது. எனவே இன்றிலிருந்து தன்னை படைப்பாற்றல் மிக்க மேதைகளாக நினைத்துக்கொள்ளும் நபர்களை சந்தித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

ஆகவே, இனிமேல் என்னை சந்திப்பதற்காக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளேன். அதன்படி என்னை யாராவது சந்திக்க விரும்பினால் 10-15 நிமிடங்களுக்கு ரூ. 1 லட்சம் செலுத்த வேண்டும். அரைமணி நேரம் என்றால் ரூ. 2 லட்சமும், 1 மணி நேரத்துக்கு ரூ. 5 லட்சமும் செலுத்த வேண்டும். இதனை உங்களால் செலுத்த முடியும் என்றால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள். அல்லது தூர நில்லுங்கள்.

என்னை சந்திப்பதற்கு முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும். தேவையில்லாமல் எனக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம். பணம் செலுத்தினால் உங்களுக்கு நேரம் கிடைக்கும். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

From Around the web