சீனாவில் வெளியாக இருக்கும் ஹன்சிகாவின் படம்..!!
 Aug 24, 2021, 07:05 IST
                                        
                                    
                                
                                    
                                105 மினிட்ஸ் என்ற திகில் சஸ்பென்ஸ் படத்தில் ஹன்சிகா மட்டுமே நடித்துள்ளார். மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், ஒரே ஷாட், ஒரே நடிகை, தெலுங்கில் தயாராகும் படத்தை ராஜா துஷா இயக்குகிறார். இந்த படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
 - cini express.jpg)