மனித குலத்தை காக்க மீண்டும் பூமிக்கு வரும் ‘ஹனுமான்’...வெளியானது ‘ஹனுமான்’ பட ட்ரைலர்..!  

 
1

இந்துக்களின் புனித கடவுள்களில் ஒருவரான ‘ஹனுமான்’ குறித்து ஏற்கனவே பல திரைப்படங்கள் வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு திரைப்படம் தான் ‘ஹனுமான்’.

பேராபத்திலிருந்து மனித குலத்தை காக்க நீ வந்தே ஆகவேண்டும் ‘ஹனுமான்’ என்று சாமியார் கோரிக்கை விடுத்தவுடன் மீண்டும் பூமிக்கு வரும் ‘ஹனுமான்’ செய்யும் மாயாஜாலங்கள் தான் இந்த படம் என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட பத்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூன்று நிமிட ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தேஜா சாஜா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராஜ், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகிய இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web