ஆத்தா மீனாட்சி துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும் தம்பி - சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகர் சூரி..!! 

 
1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றிய போது கலக்க போவது யாரு?, அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இது போக பல விருது நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, பட வெற்றி விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக ‘மாவீரன்’ படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார். மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மாவீரன் படத்தோடு அயலான் & நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 38-வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “கடின உழைப்பாளி! அருமையான கலைஞன்! சிறந்த மனிதன்! அன்பு தம்பி சிவகார்த்திகேயன் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ஆத்தா மீனாட்சி துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும் தம்பி, என் பிராத்தனைகள் தொடர்ந்து பயணிப்போம்” என வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.


 

From Around the web