ரசிகர்கள் ஹேப்பி..! மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வருகிறார் சிவராஜ்குமார்..! 

 
1

தமிழில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார் நடிகர் சிவராஜ் குமார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். 

குறிப்பாக, கேம் சேஞ்சர் படத்தை அடுத்து ராம்சரண் நடிக்கும் 16 வது படத்தில் நடிக்கப் போகிறார் சிவராஜ் குமார். தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிவதற்கு முன்பே அவர் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். 

இந்நிலையில் வருகிற மார்ச் முதல் வாரத்தில் இருந்து ஐதராபாத்தில் நடைபெறும் ராம்சரண் 16வது படத்தின் படப்பிடிப்பில் அவருடன் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சிவராஜ்குமார். பான்-இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் ஜெகபதி பாபு, ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

From Around the web