தோனி படத்துக்கு ஆங்கிலத்தில் டைட்டில் ஏன்.?
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது மனைவியி சாக்ஷியுடன் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்கிற நிறுவனத்தை துவங்கினார். இதற்கான அறிமுக விழா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. அப்போது நிகழ்ச்சியில் சாக்ஷி தோனி பங்கேற்று நிறுவனத்தின் லோகா மற்றும் பெயரை அறிமுகம் செய்து வைத்தார்.
எப்போதும் தோனிக்கு சென்னை மிகவும் பிடித்தமான நகரம். மேலும் அவருடைய முதலீடுகள், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மூலமாக தமிழகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு உள்ளிட்ட பிணைப்பால் தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். தோனி எண்டர்டெயின்மெண்ட் துவங்கப்பட்டு சில மாதங்கள் கழித்து, அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தோனியின் மனைவி சாக்ஷி தோனி தயாரிக்கும் படத்திற்கு எல்.ஜி.எம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனுடைய விரிவாக்கம் Lets Get Married என்பது தான் பொருள். அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கும் இந்த படத்தில் ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கதாநாயகியாக ’லவ் டுடே’ இவாங்கா நடிக்கிறார். மேலும் நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள சினிமாவைச் சேர்ந்த விஸ்வஜித் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அத்துடன் எல்.ஜி.எம் (Lets Get Married) படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தோனி தயாரிக்கும் படத்துக்கு முழுக்க முழுக்க ஆங்கில டைட்டில் ஏன்? என்கிற கேள்வியை பரவலாக சமூகவலைதளங்களில் முன்வைக்கின்றனர். சமீபத்தில் ஹிட்டாகும் படங்களின் டைட்டில்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் தான் உள்ளன. அதன்காரணமாகவே இந்த படத்துக்கும் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.