பார்க்கிங் பட இயக்குனருக்கு ஹரிஷ் கல்யாண் கொடுத்த பரிசு. வைரலாகும் ட்வீட்..!
பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமாருக்கு அப்படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் அணிவதில் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி. மேலும் என்னை ஸ்பெஷலாக உணரவைக்கும் அபாரமான அன்பு… என கூறியுள்ளார்.
Thankyou @iamharishkalyan anna for the token of love which is unexpected🥰. As Bracelet is my favorite accessory to wear, you have remembered that and gifted that to me is so overwhelming😇 Thank you for your delightful gift. And the immense love that makes me feel special..❤️ pic.twitter.com/6pHX76BxBp
— Ramkumar Balakrishnan (@ImRamkumar_B) December 15, 2023