ஹரிஷ் கல்யாண் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது..! 

 
1

அறிமுக இயக்குநரான ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் பார்க்கிங். இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்தது . திரையரங்குகளில் சக்கை போடு போட்ட இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக உருவெடுத்தது .

இப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருந்தனர் .

இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது பார்க்கிங் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கிறாராம். இதுமட்டுமின்றி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

From Around the web