வெற்றிமாறன் இயக்கத்தில் கௌதம் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா ? 

 
2

எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை’. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இளையராஜா, சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பீட்டர் ஹெய்ன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முக்கியமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், வெற்றிமாறன் இயக்கத்தில் கௌதம் மேனன் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்னும் இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘விடுதலை’ வெளியாகும் எனத் தெரிகிறது.

From Around the web