சினிமா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்துள்ளாரா நளினி..?
டி.ஆர். இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நளினி.
ஹிட் பட நாயகியாக இருந்த போது நடிகை நளினி, நடிகர் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்த இவர் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.இப்போது பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கும் நடிகை நளினி சினிமாவில் நுழையவே கஷ்டத்தை அனுபவித்துள்ளார்…பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவை சரியாக அமையாத ரோலாக தான் இருந்தது.
நளினி சினிமாவிற்கு செல்ல இருப்பதை அறிந்த அவரது அப்பாவும், அண்ணனும் வீட்டை விட்டே சென்றுவிட்டார்களாம்…நளினியின் அம்மா ஆதரவாக இருந்ததால் இப்போது இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்..தன்னுடைய தூணாக தாயார் இருந்ததாக பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார் நடிகை நளினி…
சினிமா வாழ்க்கை இப்படி அமைந்த நிலையில் திருமண வாழ்விலும் கஷ்டம் தான் அமைந்து..பேட்டி அளித்த நளினி தனது திருமண வாழ்க்கை பற்றி பேசியிருந்தார்.அதில் அவர் எனக்கு திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் என்னை ஜோசியம் பார்க்க அழைத்து சென்றார்கள். அப்போது ஜோசியத்தில் நாங்கள் திருமணம் ஆகி சில ஆண்டுகளில் பிரிந்துவிடுவோம் என சொன்னார்கள்.
இதைப்போல பலரும் பேசினார்கள்.அதனால் சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதற்காக நாங்களே சந்தோசமாக பிரிந்துவிட்டோம் என கூறியிருந்தார்.ஆனால் இப்போது நங்கள் பல முறை சேர்ந்து பார்த்துக்கொள்கிறோம் அதனை போல தினமும் பேசிப்போம் என சொல்லியுள்ளார் நடிகை நளினி…