பீஸ்ட் படக்குழு வெளியிடும் ஹாட்ரிக் அப்டேட்..!

 
பீஸ்ட் படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முக்கிய மூன்று அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் ப்டாத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தை இந்தாண்டே வெளியிடும் நோக்கில் பீஸ்ட் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. மேலும் தற்போது நடைபெற்று வருவது இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்று சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் வரும் பீஸ்ட், விஜய் நடிக்கும் 65-வது படமாகும். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கான ஒளிப்பதிவு பணிகளை மனோஜ் பரஹம்சா செய்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த மூன்று அப்டேட்டுகளை வெளியிட படக்குழு தயாராகியுள்ளது. அதில் முதல் அப்டேட் அக்டோபர் 13-ம் தேதி வெளிவரவுள்ளது.

அன்றைய தினம் பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால், இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அக்டோபர் 14, 15-ம் தேதிகளில் பீஸ்ட் படத்தின் முக்கியமான இரண்டு அப்டேட்டுகள் வெளிவரவுள்ளன. இதன்மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
 

From Around the web