இதை கவனிச்சீங்களா..! பேய் என்று சொல்கிறார் வெங்கடேஷ் பட்..!

 
1

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களிலும் கலந்து கொண்ட வெங்கடேஷ் பட், ஐந்தாவது சீசனில் விலகியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்பதும் அந்த நிகழ்ச்சி குறித்த முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரை மிஸ் செய்வதாக பலர் கூறிய நிலையில் அவர் இல்லாவிட்டாலும் நிகழ்ச்சி கலகலப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது என்று சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் தனது சமூக வலைத்தளத்தில் சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ள ’பேய் காதல்’ என்ற மியூசிக் ஆல்பத்தை அறிமுகம் செய்து இந்த வீடியோ குழந்தைகளுக்கு நன்றாக பிடிக்கும் என்றும், அனைவரும் பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

பிரபல நடிகை சோனியா அகர்வால், தரண் குமார் ஆகியோர் இந்த பேய் காதல் மியூசிக் வீடியோவில் நடித்துள்ளனர் என்பதும் ஆனந்த் பாரதி என்பவர் இயக்கிய இந்த ஆல்பத்தை  தரண் குமார்  இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்தின் டீசர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு வெளியான நிலையில் நேற்று இந்த பாடலின் முழு வடிவம் வெளியாகி உள்ள நிலை அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web