நடிகை ராஷ்மிகா அம்மாவை பார்த்து இருக்கீங்களா ?

 
1

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர்  ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ விஜய் நடித்த ’வாரிசு’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் அவர் தனுஷ் நடிக்க இருக்கும் ’டி51’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 39 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். தனது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வரும் ராஷ்மிகா மந்தனா சற்றுமுன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள சுமார் ஒன்பது லட்சம் லைக் குவிந்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ராஷ்மிகாவின் அம்மாவும் ஹீரோயின் போல் தான் இருக்கிறார், அவர் தாராளமாக ஹீரோயினாக நடிக்கலாம்’ என்றும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


 

From Around the web