நடிகை ஊர்வசி மகளை பார்த்தது உண்டா..?

 
நடிகை ஊர்வசியின் மகள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்த ஊர்வசியின் மகளினுடைய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

சென்னையை பிறந்து வளர்ந்தவரான ஊர்வசி, மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது உடன் நடித்த மனோஜ் கே. விஜயனை திருமணம் செய்துகொண்டார். தேஸ்வினி என்கிற பெண் குழந்தை அவர்களுக்கு பிறந்தது.

பிறகு கருத்து வேறுபாடு காரணமாக மனோஜ் கே. விஜயனை அவர் விவகாரத்து செய்தார். அதற்கு பிறகு 2013-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த சிவபிரசாத் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

திருமணமான பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் ஊர்வசி. எனினும் இதுவரை அவருடைய குழந்தைகள்  புகைப்படத்தை அவர் வெளியிட்டதே இல்லை. 

இந்நிலையில் ஊர்வசியின் மகள் தேஸ்வினியின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளன. அதில் பார்ப்பதற்கு அவர் அப்படியே ஊர்வசி போல் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

சில ரீல்ஸ் வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அம்மாவை போல தேஸ்வினியும் விரைவில் சினிமாவில் நடிகையாக அறிமுக வேண்டும் என பலரும் வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

From Around the web