காமெடி கிங் கவுண்டமணியின் மகள் பார்த்து இருக்கீங்களா ?

 
1

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வல்லகொண்டபுரம் என்கிற ஒரு கிராமத்தில் பிறந்தவர் தான் கவுண்டமணி. இவரின் உண்மையான பெயர் சுப்புரமணி. நடிக்கும் பொது இவர் போடும் கவுண்ட்டர்... அந்த படத்திற்கு வேற லெவலுக்கு ரீச் கொடுத்ததால், கவுண்டர் மணியாக இருந்து... பின்னர் கவுண்டமணியாக மாறி விட்டது.

80-களில் செந்திலுடன் இவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில், ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் காமெடியனாக படு பிசியான நடிகராக வலம் வந்தார். 90-களில் ஒரே வருடத்தில் இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2000-ஆம் ஆண்டுகளில் மெல்ல மெல்ல, காமெடி காட்சியில் நடிப்பதை குறைத்து கொண்டு... குணசித்ர வேடங்களில் நடிக்க துவங்கினர். தற்போது இவருக்கு 84 வயது என்றாலும், உடலை செம்ம ஃபிட்டாக வைத்திருக்கும் கவுண்டமணி, கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக 2016ஆம் ஆண்டு 'எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' மற்றும் 'வாய்மை' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவர் சாந்தி என்பவரை திருமணம் செய்த கவுண்டமணிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இவர் சென்னையில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தனது கணவருடன் வந்து சேவை செய்வதாகவும் கூறப்படுகிறது.

1

From Around the web