ஜெயம் ரவியின் பிரதர் ட்ரைலர் பார்த்தாச்சா ?

ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி ,பிரியங்கா மோகன்,சரண்யா பொன்வண்ணன் மற்றும் பூமிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இந்த திரைப்படமானது தீபாவளி தினமான எதிர்வரும் அக்டோபர் ஒக்டோபர் 31 தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
பிரதர் படத்தின் பாடல்கள் ஏராளமான ரசிகர்களை கொண்டாட செய்துள்ள நிலையில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'ஸ்கிரீன் சீன் மீடியா'(Screen Scene Media) என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியாகிறது.
முன்னதாக இப்படத்தின் முதல் சிங்கிள் ‘மக்காமிஷி’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் ‘மெதக்குது காலு ரெண்டும்’ என்ற பாடல் அக்டோபர் 23 மணிக்கு வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.