மண்வாசனை பாண்டியனின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?
Feb 20, 2025, 07:35 IST

'மண் வாசனை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பாண்டியன். புதுமைப் பெண், ஆண் பாவம், நாடோடித்தென்றல், கிழக்குச் சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் நடிகர் அஜித்தின் 'சிட்டிசன்' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் நடிகர் பாண்டியனின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.