"நேஷனல் க்ரஷ்" ராஷ்மிகா தங்கையை பார்த்து இருக்கீங்களா ?
Feb 28, 2025, 06:05 IST

''நேஷனல் க்ரஷ்'' என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவிற்கு உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சீதா ராமம், வாரிசு, புஷ்பா, புஷ்பா 2, சாவா என ராஷ்மிகா நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் கொடுத்தவை.
மதன் மந்தனா- சுமன் மந்தனா தம்பதியின் மூத்த மகளான நடிகை ராஷ்மிகாவிற்கு உடன் பிறந்த குட்டி தங்கை ஒருவர் உள்ளார் என்பது பலருக்கும் தெரியாது.தனது தங்கையின் மீது அளவற்ற பேரன்பும் பாசமும் வைத்திருப்பதாக ராஷ்மிகா அவவ்போது தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கூறியுள்ளார்.
தனது தங்கையை விட நடிகை ராஷ்மிகா 17 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கையுடன் ராஷ்மிகாவின் கியூட் போட்டோஸ் தற்போது இணையத்தை ஆட்கொண்டுள்ளது.