விரைவில் தயாராகிறது ஹாரி பாட்டர் வெப் சிரீஸ்..!!

எட்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ஹாரி பாட்டர் நாவல், வலை தொடராக தயாராகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
harry potter

இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் கடந்த 1997-ம் ஆண்டு வெளியிட்ட ’ஹாரி பாட்டர்: அண்டு தி பிளாசபர்ஸ் ஸ்டோன்’ புத்தகம் விற்பனையில் மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மொத்தம் ஹாரி பாட்டர் நாவலை ஏழு பாகங்களாக எழுதி வெளியிட்டார். இவை அடுத்தடுத்த ஆண்டுகள் வெளியாகி உலகளவில் பல மில்லியன் மக்களை கவர்ந்தது.

இந்த புத்தகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் தாக்கத்தை புரிந்துகொண்ட வார்னர் பிரதஸ் நிறுவனம், திரைப்படமாக எடுக்க முன்வந்தது. இதையடுத்து கிறிஸ் கொலம்ப்ஸ் இயக்கத்தில் 2001-ம் ஆண்டு ஹாரி பாட்டர்: தி பிளாஸபர்ஸ் ஸ்டோன் திரைப்படமாக வெளியானது. புத்தக விற்பனையை விடவும், இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு பாகங்களும் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்தன. இதனுடைய கடைசி பாகமான ஹாரிபாட்டர் : அன் தி டெத்லி ஹாலோஸ் 2 படம் பெரும் வரவேற்பை பதிவு செய்து, சரித்தர வசூல் சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில் ஹாரி பாட்டர் நாவல் வலை தொடராக தயாரிக்கப்படுகிறது. 


ஹெச்.பி.ஓ நிறுவனத்தின் மேக்ஸ் ஒர்ஜினல்ஸ் ஓ.டி.டி தளம் இந்த வலை தொடரை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஹாரி பாட்டர் நாவலின் உண்மையான தழுவலாக இருந்த வலை தொடர் இருக்கும். மந்திர தந்திர உலகின் உண்மையான பதிவாக இந்த வலை தொடர் உருவாக்கப்படும் என ஹெச்.பி.ஓ மேக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ கேஸி பிளாய்ஸ் கூறியுள்ளார்.

ஹாரிபாட்டர் வலை தொடர் 2025 அல்லது 2026 முதல் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 10 ஆண்டுகள் இந்த தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளது. ஏற்கனவே ஹாரி பாட்டர் படங்களில் நடித்த நடிகர்கள் யாரும் இந்த வலை தொடரில் இடம்பெறமாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

From Around the web