பெண் குழந்தைக்கு தந்தையானார் புகழ்..! ஆனந்த கண்ணீரில் போட்ட பதிவு  வைரல்..! 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் புகழ்.

திரையுலகில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிவந்த இவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய ஒரு ஆயுதமாக அமைந்தது…தொடர்ந்து அடுத்தடுத்து பல வாய்ப்புகளையும் பெற்று தந்தது இவருக்கு.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் புகழ் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் புகழின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது,இந்நிலையில் அவர் மனைவி பென்சி கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது இவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை புகழ், புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார் இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது.அதற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web