என்னை ஏமாற்றி தான் கல்யாணம் செய்தாரு! நாஞ்சில் விஜயன் மனைவி அதிரடி..!
கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் நாஞ்சில் விஜயன் கலக்கியிருப்பார். அதிலும் பெண் வேடம் அணிந்து மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பார்.
அண்மையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை விவகாரத்தில் நாஞ்சில் விஜயன் வசமாக சிக்கினார். அதாவது பிரபல நடிகை ஒருவருடன் இணைந்து 1500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் ஒன்றை பிளாக்கில் 6000, 7000 என பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக புகார் எழுதன.
இவ்வாறு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் விஜயன், கலர்ஸ் தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு 10 மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்தது. தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணை தான் நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், நாஞ்சில் விஜயனும் அவரது மனைவி மரியாவும் யூடியூப் சேனல் ஒன்று அளித்த பேட்டியில், இவர் என்னை ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டார் என மரியா அதிரடியாக கூறியுள்ளார்.
அதாவது நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்ளும்போது அவருடைய வயதை சொல்லவில்லை. ஆனால் இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும். என்னை பெண் பார்க்க வந்தபோதே கூட இவரது தலையில் மீசை, எல்லாம் வெள்ளையாகவே இருந்தது.
திருமணத்துக்கு பிறகு ஒரு நாள் இவருடைய தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டேன். அப்போதுதான் சாயம் வெளுத்தது. தலை பூரா வெள்ளை முடித்தான் என்று தனது கணவர் பற்றி நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இதற்கு நாஞ்சில் விஜயன் நான் ஏமாற்றி திருமணம் செய்யல. என்னோட வயசையும் நான் மறைக்கவில்லை. இந்த வெள்ளை முடிக்கு மட்டும் தான் டை அடிச்சேன் என்று கூறியுள்ளார்.