இவர் ஒரு மாடர்ன் மணிரத்னம்…இயக்குனரை புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா!

 
1

பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்தப் படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தி மாஸ் காட்டியது…இப்படி இருக்கும் நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்…மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்தப் படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் முன்னதாகவே துவங்கியுள்ளனர் 

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி மிகச்சிறப்பாக அமைந்தது படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்…மாமதுர என்று துவங்கும் அந்தப்பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் தீ இணைந்து பாடியுள்ளனர் பாடல் யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியின் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப்படத்தின் ஸ்கிரிப்டை எழுதி ஒரு ஷேப்பிற்கு கொண்டுவர தனக்கு 8 -9 ஆண்டுகள் ஆனதாக குறிப்பிட்டுள்ளார் 

இந்தப்படம் உணர்ச்சிப்பூர்வமாக ரசிகர்களிடம் தொடர்புப்படுத்திக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்ஜே சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்து பேசினார் அவர் மாடர்ன் டே மணிரத்னம் என்று அவர் புகழ்ந்துள்ளார்.

அதனை போல தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று சொல்லியிருந்தார்….இந்தப் படம் வெளியாகும்போது அதன் பிரம்மாண்டம் ரசிகர்களிடம் வெளிப்படும் என்றும் கூறியுள்ளார்…விரைவில் இன்னும் பல அப்டேட் வரும் என எதிர்பார்க்க படுகிறது…

From Around the web