இந்தியில் மாஸ்டர் படத்தை இயக்கப்போவதும் அவரே தான்..!

 
இந்தியில் மாஸ்டர் படத்தை இயக்கப்போவதும் அவரே தான்..!

தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த மாஸ்டர் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள நிலையில், அதை பாலிவுட் இயக்கப்போகும் இயக்குநர் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன.

கொரோனா பொதுமுடக்கம் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த இந்த படம் தென்னிந்தியளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனுடைய தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட டப்பிங் வெர்ஷன்கள் ஒ.டி.டி-யில் வெளியாகி அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மாஸ்டர் படம் அதே பெயரில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கும் இந்தி ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பிரபல நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி மாஸ்டர் படத்தில் ஹீரோவாக நடிக்க பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் சல்மான் கான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் வெளியான போக்கிரி, உனக்கும் எனக்கும், சிறுத்தை உள்ளிட்ட படங்களை இந்தியில் ரீமேக் செய்து வெற்றிக்கொடி நாட்டிய பிரபுதேவா, மாஸ்டர் பட இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரபுதேவா - சல்மான் கான் கூட்டணியில் வானடட், தபாங் - 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் சல்மான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியுள்ள ‘ராதே’ படம் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web