முன்னாள் காதலியை பார்க்க பிரமிக்கவைக்கும் ரிஸ்க் எடுத்த அவன் இவன் நடிகர்..!

 
1

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார் என பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு திருப்பு முனையாக இருந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த படமாக 'அவன் இவன்' திரைப்படம் காணப்படுகிறது.

கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்திலும் இறுதியாக இவர் நடித்திருந்தார்.

இலங்கையைச் சேர்ந்த இவர், இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், பல்வேறு கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.இந்த நிலையில், தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கிலோ மீட்டர் பயணித்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். இந்த தகவல் வைரலாகியுள்ளது.

அதன்படி, மெட்ராஸிலிருந்து பெங்களூர் வழியாக கோவா சென்று பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

1

From Around the web