இனி ஆதி குணசேகரனாக நடிக்க போவது இவர் தான்..!
Oct 1, 2023, 09:05 IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்து மிகப்பெரிய பலமாக இருந்து வந்தவர் மாரிமுத்து.
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காரணத்தினால் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் கடந்த ஒரு சில வாரங்களாக சீரியல் கதை நகர்ந்து வருகிறது. அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்க பலரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போதைய சீரியல் குழு இறுதியாக ஒருவரை தேர்வு செய்துள்ளது.
ஆமாம் அவர் வேறு யாருமில்லை வேல ராம மூர்த்தி அவர்கள் தான். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது இவரையே கமிட் செய்து சூட்டிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் அவருடைய காட்சிகளை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.