இவர் தான் ‘ஜெய் பீம்’ தலைப்பை எங்களுக்கு கொடுத்தார்- சூர்யா..!

 
நடிகர் சூர்யா

விரைவில் வெளிவரவுள்ள ஜெய் பீம் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இன்ஸ்டாகிராம் லைவ் நேர்காணலின் போது நடிகர் சூர்யா கூறினார்.

கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய தா.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்த படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து, மேலும் அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது, இருளர் இன மக்களுக்காக அவர் வாதடிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெய் பீம் படம் நவம்பர் 2-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் சமூகவலைதளங்களில் நடந்து வருகின்றன. அதற்காக நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ரசிகர்களுடன் பேசினார். அப்போது, படத்திற்கு ஜெய் பீம் என்கிற தலைப்பை முடிவு செய்திருந்தோம். ஆனால் அந்த தலைப்பை பா. ரஞ்சித் பதிவு செய்து வைத்திருந்தார். படத்தின் கதையை கூறியதும், அந்த டைட்டிலை எங்களுக்கு அவர் வழங்கினார். அதனால் இந்நேரத்தில் இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சூர்யா பேசினார். மேலும் அந்த நேரலையில் ‘ஜெய் பீம்’ படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
 

From Around the web