லியோ படத்தில் வில்லனும் இவரே: தந்தையும் இவரே..!!

 
1

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திர விபரங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. அதற்கு 3 காரணங்கள் உள்ளன. ஒன்று- இது விஜய் படம், இரண்டு- இது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம், மூன்று- இதிலிருக்கும் நட்சத்திர பட்டாளம்.

தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத பிரமாண்டமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். பாலிவுட் சினிமாவில் இருந்து முதன்முறையாக சஞ்சய் தத் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

லியோ படத்தில் அவருடைய கதாபாத்திரம் தொடர்பான பின்னணி விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது அவர் தான் இந்த படத்தில் விஜய்யின் தந்தையாம். அதேசமயத்தில் அவர் தான் படத்தின் வில்லனும் கூட.

சஞ்சய் தத்துடன் இருக்கும் விஜய்  ஒரு கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகி விடுகிறார். அவரை தேடி திரியும் சஞ்சய் தத்தின் பணியாளரான அர்ஜுன், காஷ்மிரீல் விஜய் திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதை தெரிந்துகொள்கிறார்.

அவரை மீண்டும் சஞ்சய் தத்திடம் அழைத்து வரும் முயற்சியில் அர்ஜுன் கொல்லபப்டுவதை அடுத்து, விஜய் தனது தந்தையை தேடி சொந்த ஊர் வருகிறார். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் லியோ படத்தின் கதை என்று தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த படத்தில் நடிகர் விஜய் பார்த்திபன், லியோ என்று இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் எல்.சி.யூ-க்குள் இருந்தாலும், கைதி மற்றும் விக்ரம் படங்களில் வரும் சம்பவங்களுக்கு முன்னதாக நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. அதனால் இந்த படத்தில் வரக்கூடிய மற்ற கதாபாத்திரங்கள் எல்.சி.யூ-க்குள் அடிக்கடி வரு. ஆனால் விஜயின் லியோ கதாபாத்திரம் இந்த படத்தில் மட்டும் தான் இருக்கும் என தகவல்கள் கூறப்படுகின்றன.

From Around the web