விஷத்தை குடிச்சுருவேன் சொன்னாரு... அதனால கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் - குமாருக்கு ஷாக் கொடுத்த அரிசி..! 

 
1

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி தனது கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து காட்டி ஷாக் கொடுக்கிறாள். குமாரே அதை பார்த்து திணறிப்போய் நிற்கிறான். அப்போது தான் அரசி தானே கழுத்தில் தாலி கட்டியது தெரிய வருகிறது. அதாவது காரில் வரும் போது இப்போ போய் உன்னை வீட்ல விட்டு, நைட்டு முழுக்க நீ என்கூட இருந்தான்னு சொல்லுவேன். அதைக்கேட்டு கல்யாண மாப்பிள்ளை உங்க குடும்பத்துக்கு பெரிய கும்பிடு போட்டு கிளம்பி போவான்

அதுக்கப்புறம் உன்னை வேற எவனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். உன் குடும்பம் செஞ்சது எல்லாத்துக்கு சேர்த்து அனுப்பவீங்க என்கிறான். அதனை தொடர்ந்து அதேபோல் குமார் தன்னைப்பற்றி அசிங்கமாக பேச, அப்போது காரில் இருக்கும் தாலியை அவளே எடுத்து கட்டிக்கொள்கிறாள். இது எதுவுமே தெரியாமல் குமார் வந்து வீர வசனம் பேசி இருக்கிறான். அரசி வந்து அவர் சொன்ன எல்லாமே உண்மை தான். என்னால இன்னொருத்தரை காதலிச்சுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியலை.


அதுனால தான் அவரை பார்க்க போனேன். இதுவரையும் அவர் சொன்னது உண்மை. மீதி உண்மையை உங்க எல்லாரையும் பார்த்து பயந்துட்டு மறைச்சுட்டாரு. இவரும் நான் இல்லாம வாழ முடியாதுன்னு சொன்னாரு. நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டா விஷத்தை குடிச்சுருவேன் சொன்னாரு. அதுனால தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் என சொல்கிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத குமார் ஆடிப்போகிறான். அவனால் உண்மையை சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கிறான்.

அப்போது மாப்பிள்ளையின் அம்மா நீங்க அடிச்சுப்பீங்க, சேர்ந்துப்பீங்க. இப்போ எங்களை அசிங்கப்படுத்துட்டீங்கள. நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க என சாபம் விடுகிறாள். அரசி அவளிடம் அத்தை இதுல அப்பா மேல எந்த தப்பும் இல்லை. என்னை மன்னிச்சுடுங்க என்கிறாள். அப்போது கோமதி வந்து அவளை ஓங்கி அறைகிறாள். பாண்டியனின் அக்கா சாபம் விட்டுவிட்டு மாப்பிளையை அழைத்து கொண்டு கிளம்புகிறாள்.

மீனா கோபமாக அரசியிடம் காதலிச்சவனை கல்யாணம் பண்றது எல்லாம் தப்பில்லை. ஆனால் இவனை போய். கேடு கெட்ட ரவுடி பையன் இவன் என சொல்கிறாள். உடனே சக்திவேல் கடுப்பாகி என் பையனை பத்தி என்ன பேசுற. அவன் கால் செருப்புல உள்ள தூசிக்கு சமம் ஆவாளா, இந்த ஓடுகாலி பெத்தவ என்கிறான். அதற்கு மீனா உங்க பையன் எப்படி பட்டவன்னு உங்களுக்கு தெரியாத என்கிறாள். அப்போது கதிர் எனக்கு அரசி சொல்ற எதுலயும் நம்பிக்கை இல்லை.

இவன்தான் ஏதோ பண்ணி இருக்கான் என சொல்லி குமாரை வெளுக்க போகிறான். அப்போது அரசி பாண்டியன் முன்பாக வந்து, நீங்க சொன்ன பையனை கல்யாணம் பண்ணலாம் தான் இருந்தேன்ப்பா. ஆனால் இவரு செத்து போயிருவேன் சொன்னப்ப என்னால எதுவும் பண்ண முடியலைப்பா. என்னை மன்னிச்சுடுங்க என காலில் விழுகிறாள் அரசி. பாண்டியன் எதுவும் பேச முடியாமல் சிலையாக நிற்கிறான். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.

From Around the web