ஐயா படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்..!!

 
ஐயா படத்தில் நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் ஹரி. அவருடைய இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின் மூலம் தான் அவர் தமிழில் கால்பதித்தார்.

ஆனால் ஐயா படத்தில் முதலில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் நயன்தாரா கிடையாது என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரஜினிக்காக எழுதப்பட்ட கதையாகும்.

இந்த படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்த காரணத்தால், கதாநாயகனாக சரத்குமார் நடித்தார். அதேபோல நெப்போலியன், லக்ஷ்மி, ரோகிணி, மாளவிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

அதேபோல இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நயன்தாரா. ஆனால் அவருக்கு பதிலாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நவ்யா நாயார். மலையாளப் படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் நவ்யா நாயர் ஐயா படத்தில் நடிக்காமல் இருந்துவிட்டார்.

அதனால் அந்த வாய்ப்பு நயன்தாராவை நோக்கிச் சென்றுள்ளது. அதை தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் அவர் ஜோடியாக் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஒருவேளை ஐயா படத்தில் நயன்தாரா நடித்திருக்காவிட்டாலும், அவருடைய வளர்ச்சியை யாராலும் தடுத்திருக்க முடியாது என்பதே உண்மை.

From Around the web