‘அண்ணா’ சீரியலில் இனி இவருக்கு பதில் இவர்..! 

 
1

‘அண்ணா’ சீரியலில் கதாநாயகனின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்து வந்த நடிகை தர்ஷு சுந்தரம் தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ சீரியலில் கதாநாயகனாக மிர்ச்சி செந்திலும் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா ராமும் நடித்து வருகிறார்கள். நடிகை நித்யா ராம் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர்தான்.

நான்கு தங்கைகளில் ஒருவராக வீரா கேரக்டரில் அயலி வெப் சீரிஸ் மூலமாக பிரபலமான நடிகை தாரா நடித்து வந்தார். அவருக்கு சத்தியா ராகம் சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தொகுப்பாளினியாக வலம் வந்த தர்சு நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரும் தற்போது, “தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னுடைய குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயத்தினால் நான் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறேன்” என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அண்ணா சீரியலில் தர்ஷுவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் வீரா கேரக்டரில் புதியதாக நடிக்க உள்ள நடிகைக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 இந்த நிலையில் அவர் நடித்து வந்த வீரா கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடன ரியாலிட்டி ஷோவான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகி இருக்கும் கௌரி இனி வீராவாக நடிப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

From Around the web