பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இடம்பெற்று வந்த முக்கிய கதாபாத்திரம் இனி வரமாட்டார்..!!

 
சுஜிதா


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இடம்பெற்று வந்த முக்கிய கதாபாத்திரம் இறந்துபோன விதமாக காட்டப்பட்டுள்ளது பார்வையாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மிகப்பெரியளவில் பார்வையாளர்கள் வட்டம் உண்டு. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

வார இறுதி நாட்களில், வார நாட்களில் நடக்கப்போகும் சம்பவங்களை தொகுத்து ப்ரோமோவாக வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வார இறுதி நாளில் இந்த வார நாட்களில் ஒளிப்பரப்பாகும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் தாயார் லட்சுமி கதாபாத்திரம் மறைந்துபோகும் விதத்தில் ப்ரோமோவில் காட்சிகள்  இடம்பெற்றுள்ளன. ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு கொண்ட இந்த கதாபாத்திரம் திடீரென இறந்துபோகும் விதத்தில் காட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரோமோவில் ஒட்டுமொத்த குடும்பமும் கதறி அழுவது போல காட்சிகள்  வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அனைவரும் கலங்கிப்போய் உள்ளனர்,  இதற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From Around the web