இன்று வெளியாகும் 6 முக்கிய படங்கள்... வெற்றி வாகை சூடப்போவது யார்?

 
1

ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான்.

அந்த வகையில் இன்றைய தினம் இருபதாம் தேதி கிட்டத்தட்ட ஆறு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. அவை முக்கிய நடிகர்களின் படங்களாக காணப்படுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காணப்படுகின்றார்கள்.

'தோழர் சேகுவாரா' என்ற திரைப்படம் இருபதாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சத்தியராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இவருடன் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை அலெக்ஸ் இயக்கியுள்ளார்.

'லப்பர் பந்து' என்ற படமும் இந்த வாரம் வெளியாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்தை, அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து எழுதி  இயக்கியுள்ளார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், பால சரவணன், காலி வெங்கட் , கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சசிகுமார் நடித்திருக்கும் படம் தான் 'நந்தன்'. இந்த படத்தை சரவணன் இயக்கியுள்ளார். இதில் சமுத்திரகனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்தப் படமும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான படம் தான் ' கோழிப்பண்ணை செல்லதுரை' .  இதில் ஏகன், ஜோகி பாபு,   பாவா செல்லதுரை, சத்திய தேவி, ஜெயசூர்யா, குட்டி புலி தினேஷ், மாஸ்வி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் ரிலீஸாகும் முன்பே சர்வதேச விருதை வென்றுள்ளது.

ஹிப் ஹாப்  ஆதி இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் 'கடைசி உலகப் போர்'. இந்த படத்தில் நாசர், அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனுஷ்காந்த், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், அனகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தான்  இசையும் அமைத்துள்ளார். மேலும் இந்த படம் எதிர்வரும் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.

From Around the web