‘ஆதிபுருஷ்’ படத்தின் 2 ஆம் வீடியோ பாடல் இதோ..!!

 
1

இராமாயணத்தின் ஒரு பகுதியை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். புதிய யுக ராமரை பார்க்கும் வகையில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்திலிருந்து ராம் சீதா ராம் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அஜய் - அதுல் இசையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில்  வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல் தமிழில் ஜி.முரளிதரன் வரிகள் எழுதியுள்ளார். கார்த்திக் இப்பாடலை பாடியுள்ளார்.

அட்டகாசமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

From Around the web