இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் முழு லிஸ்ட் இதோ..!

 
1

ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீசாகி ரசிகர்களின் வீக்கெண்டை ஜாலி ஆக்குகிறது. தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளை சார்ந்த படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. 

இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள படங்கள் குறித்தான லிஸ்ட்டை பார்க்கலாம்.

பாட்டல் ராதா

பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரின் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் வெளியான படம் 'பாட்டல் ராதா'. குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்தது. குடிப்பழக்கம் தொடர்பான விளைவு குறித்து பேசும் படமாக வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் ரிலீசான 'பாட்டல் ராதா' இன்று 21 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியது.


வணங்கான்

கடந்த ஜனவரி மாதம் பாலா இயக்கத்தில் திரையரங்குகளில் ரிலீசானது 'வணங்கான்'. சூர்யா விலகியதை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் உருவான வணங்கான் பாலாவின் கம்பேக் படமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகிறது. டென்டுகொட்டாய் ஓடிடி தளத்தில் 'வணங்கான்' இன்று  21 ஆம் தேதி வெளியாகியது.


டாகு மகாராஜ்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தற்பொழுது தனது 109-வது படத்தில் நடித்துள்ளார். 'டாகு மகாராஜ்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கி உள்ளார். பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ் தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த மாதம் 12-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில், பாலகிருஷ்ணாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை 'டாகு மகாராஜ்' படைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 21-ந் தேதி (இன்று ) நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேக்ஸ்

வி.பி.வினு இயக்கத்தில் பல விருதுகளை வென்ற படம் 'சாட்சி பெருமாள்'. சாட்சி கையெழுத்து போடுபவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் நேரடியாக டென்டுகொட்டாய் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகியுள்ளது. இதே போல் சுதீப்பின் 'மேக்ஸ்' ஜீ5 ஓடிடியிலும், டாகு மகாராஜ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த வாரம் வெளியாகிறது.


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் vs ட்ராகன்

இந்த வாரம் தியேட்டர் ரிலீசாக தனுஷின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மற்றும் பிரதீப் ரங்கநாதனின் 'ட்ராகன்' ரிலீசாகின்றன. இளைஞர்களை குறி வைத்து உருவாகியுள்ள இந்த இரண்டு படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகளும் துவங்கி மும்முரமாக நடந்து வந்தது. அதே போல் சமுத்திரக்கனியின் 'ராமம் ராகவம்' என்ற படமும் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web