முதன்முறையாக இரட்டை வேடங்களில் சிவகார்த்திகேயன்- இதோ முழு விபரம்..!

 
சிவகார்த்திகேயன்
பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனிஸ்காந்த், சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

டான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அசோக் என்பவர் இயக்குகிறார். சத்யஜோதி ஃப்லிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் அந்த படத்தில் அவர் தந்தை - மகன் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் படத்துக்கு சிங்கப் பாதை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பட தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web