சினிமாவில் அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகள்- முழு விபரம் இதோ..!
 

 
விஜய் சேதுபதி மற்றும் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகள் ஸ்ரீஜா இணைந்து நடித்துள்ள ‘முகிழ்’ திரைப்படத்தில் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விபரங்களை பார்க்கலாம்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி புதியதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதியின் 10 வயது மகள் ஸ்ரீஜா சினிமாவில் கால்பதிக்கிறார்.

இந்த படத்துக்கு முகிழ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் கடந்தானே வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டிராக்கை, நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘மாயக்காரா’ என தொடங்கும் அந்த படத்தின் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவருடைய மகள் ஸ்ரீஜாவும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

From Around the web