இன்று ஆயுதபூஜை ஸ்பெஷலாக டிவியில் போடப்படும் படங்களின் லிஸ்ட் இதோ ..!

 
1

இன்று ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் பல படங்கள் போடவுள்ளனர்..அதை பற்றி பார்ப்போம்..

அனைவரின் பிடித்தமான சேனல் சன் டிவியில் ஆயுத பூஜை தினத்தன்று இன்று 23-ம் தேதி காலை 11 மணிக்கு சூர்யா நடித்த சிங்கம் 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது…அதன்பிறகு அன்று மதியம் 2.30 மணிக்கு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த உனக்கும் எனக்கும் படமும்,மாலை 6.30 மணிக்கு மாவீரன் படமும் ஒளிபரப்பாக உள்ளது.

24-ம் தேதி விஜயதசமி தினத்தன்று காலை 11 மணிக்கு ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான பேட்ட படமும், பிற்பகல் 3.30 மணிக்கு வடிவேலு ஹீரோவாக நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது…இப்படி நிறைய பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாமல் படங்கள் இருக்கின்றது..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை தினத்தன்று காலை 10.30 மணிக்கு அருண் விஜய்,பிரியா பவானி சங்கர் நடித்த யானை திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.அன்று மதியம் 1.30 மணிக்கு சந்தானத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான டிடி ரிட்டன்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் ஆயுத பூஜை தினத்தன்று உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மாமன்னன் திரைப்படம் இன்று 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது…இது கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்று தெரிகிறது…அதேபோல் விஜயதசமி தினமன்று காலை 10.30 மணிக்கு மணிகண்டனின் கலகலப்பான திரைப்படமான குட் நைட் போடப்பட உள்ளது..

From Around the web