டிஜிட்டல் தரத்திற்கு மாறும் மணிரத்னத்தின் கிளாசிக் படங்கள்- பட்டியல் இதோ..!

 
டிஜிட்டல் தரத்திற்கு மாறும் மணிரத்னத்தின் கிளாசிக் படங்கள்- பட்டியல் இதோ..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி கிளாசிக் ஹிட்டடித்த படங்கள் 8K resolution டிஜிட்டல் தரத்திற்கு மாற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனும் பிரமாண்டமாக தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், சத்தமே இல்லாமல் மணிரத்னம் படங்களுக்கு தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அவருடைய இயக்கத்தில் வெளியான தளபதி, ரோஜா மற்றும் பாம்பே உட்பட மற்ற 26 படங்களை 8-கே ரெசல்யூஷன் தரத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஃப்லிம் ஹெரிடேஜ் பவுண்டேஷன் ஸ்டூடியோஸ் ஃபவுண்டேஷன் மற்றும் சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோஸ் இணைந்து இதற்கான பணிகளை செய்து வருகின்றன.

டிஜிட்டல் தரத்திற்கு மாற்றப்பட்டு வரும் படங்கள் விரைவில் பிரபல ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து மேலும் பல்வேறு படங்கள் டிஜிட்டல் தரத்திற்கு மாற்ற அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 

From Around the web