லவ் டுடே படத்தின் மேக்கிங் வீடியோ இதோ..!! 

 
1

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லவ் டுடே.. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, அஜித் காலிக், ரவீனா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. இந்த வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. 

இந்நிலையில் இப்படம் தற்போது இந்தியில் அதிகாரப்பூர்வமாக ரீமேக்காக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான Phantom Studios இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளது. விரைவில் மற்ற விபரங்களை வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதோடு இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் படத்தில் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. ‘லல் டுடே’ படத்திற்காக உழைத்த படக்குழுவினருக்கு நன்றி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


 


 

From Around the web