இதோ வெளியானது துருவ நட்சத்திரம் பட அப்டேட்- விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

 
துருவ நட்சத்திரம்

நீண்ட ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் தான் துருவ நட்சத்திரம். ஆனால் திரைக்கதையில் உடன்பாடு ஏற்படாததால் அப்படத்தில் இருந்து விலகினார் சூர்யா. அதை தொடர்ந்து அப்பட வாய்ப்பு விக்ரமிடம் சென்றது.

உடனடியாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளில் துவங்கின. இதில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

படத்தின் டிரெய்லர் வெளியான போது சிம்ரனுடைய கதாபாத்திரம் படத்தை எதிர்பார்க்க வைத்தது. மேலும் இந்த படத்தில் ராதிகா, திவ்யதர்ஷினி, விநாயகம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனுடைய பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

அதன்படி இப்போது வரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளை வைத்து முதல் பாகம் வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது துருவ நட்சத்திரம் இரண்டாம் பாகத்தை வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

From Around the web