இந்த வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் இதோ..! 

 
1

டிவி சேனல்களுக்கு உள்ளே டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தை பிடிப்பதற்காக புதுப்புது சீரியல்களை களம் இறக்கி வருவதுடன், மாறுபட்ட கதை அம்சங்களை உட்புகுத்தி வருகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது இந்த ஆண்டில் 24-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வரும் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரமும் முதலாவது இடத்தைப் பிடிக்க, இரண்டாவது இடத்தை தற்போது புதிதாக தொடங்கப்பட்ட மருமகள் என்ற சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலில் விஜய் டிவி பிரபலமான கேப்ரியல்லா நடித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது இடத்தை பெற்று வந்த கயல் சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பெற்றுள்ளது.

மேலும் கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் காணப்பட்ட வானத்தைப்போல சீரியல் இந்த வாரமும் அதே இடத்தை தக்க வைத்துள்ளது. அடுத்ததாக ஆறாவது இடத்தில்  மல்லி சீரியலும், ஏழாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், எட்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் காணப்படுகின்றது.

இறுதியாக ஒன்பதாவது இடத்தில் சுந்தரி சீரியலும், பத்தாவது இடத்தில் ஆகா கல்யாணம் சீரியலும் காணப்படுகின்றது.இவ்வாறு இந்த வாரத்தின் டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியான நிலையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருமகள் சீரியல் அடித்துப் பிடித்து முன்னிலைக்கு வந்துள்ளமை பலராலும் வியக்கப்பட்டு வருகின்றது.

From Around the web