புதியதாக வீடு கட்டியுள்ள ’டாடா’ ஹீரோயின்- இதோ வீடியோ..!!

டாடா படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்ட நடிகை அபர்ணா தாஸ், புதியதாக வீடு கட்டியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
 
 
aparna das

மலையாளத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘நான் பிரகாஷன்’. சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஃபகத் பாசில் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ஸ்ரீனிவாசன், தேவிகா சஞ்சய், நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ். மஸ்கட்டில் பிறந்த இவர், கோயம்புத்தூரில் கல்லூரி படிப்பை முடித்தார். டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபர்ணா தாஸுக்கு அதன்மூலகமாகவே சினிமா வாய்ப்புகள் வந்தன.

நான் பிரகாஷன் படத்துக்கு பிறகு மனோகரம் படத்தில் நடித்தார். இதன்மூலம் தமிழில் 2022-ம் ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தில் நடித்தார். இது அவருக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான அடையாளத்தை பெற்று தந்தது. தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

அண்மையில் கவின் உடன் அவர் நடித்த, டாடா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் மூலம் நிறைய பட வாய்ப்புகளை அபர்ணா தாஸ் பெற்று வருகிறார். தற்போது அவர் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளாராம், ஆரம்பிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று முழுவதும் வீடு முடிந்து எடுத்த போட்டோ இரண்டையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.  

From Around the web