2023-ல்  திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் ஒர் பார்வை ..! 

 
1

கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியாவும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். 

நடிகை கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வந்தார்கள். இதையடுத்து  கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். ராஜஸ்தானில் இருக்கும் சுர்யகர் அரண்மனையில் அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது.

1

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரும் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 2023 டிசம்பர் 15 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா ஆதிக்கை விட 7 வயது மூத்தவர் மற்றும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1

நடிகை ராதாவின் மகளும், 'கோ' பட நடிகையுமான கார்த்திகா நாயருக்கும் இந்த ஆண்டில் தான் திருமணம் நடைபெற்றது. நடிகை கார்த்திகா நாயர் தொழிலதிபரான ரோஹித் மேனன் அவர்களை நவம்பர் மாதத்தில் கரம் பிடித்தார். மிகவும் பிரம்மாண்டமாக கேரளாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் தென்னிந்திய திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பலரும் வாயைப் பிளந்தனர். ஏனெனில் கார்த்திகா கிலோ கணக்கில் நகையைப் போட்டு ஜொலித்தார்.

1

காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி டிவி நடிகையான சங்கீதாவை 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தார். ரெடின் கிங்ஸ்லியும், சங்கீதாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதில் சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் மற்றும் இவருக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1

பழம்பெரும் நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தியும், பாடகியான ரூபாலியும் காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் 2023 ஆம் ஆண்டின் மே மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

1

நடிகர் கவின் இந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் தனது நீண்டகால காதலியான மோனிகா டோவிட்டை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.

1

நடிகை அமலா பால் 2023 ஆம் ஆண்டில் தனது நீண்டகால காதலரான ஜகத் தேசாயை கேரளாவின் கொச்சியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கிராண்ட் ஹையாட் கொச்சி போல்காட்டியில் நடைபெற்றது. இச்செய்தியை வெளிப்படுத்தும் வகையில் திருமண செய்தியை தம்பதிகள் இருவரும் இன்ஸ்டாவில் தங்களின் திருமண போட்டோக்களை பகிர்ந்து கொண்டனர்.

1

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் ஒரு திறமையான ஜோடி. இவர்கள் இருவருக்கும் 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் திருநெல்வேலியில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளின் திருமணம் நடந்த விதம் அனைவராலும் சிறப்பாக பேசப்பட்டது. தற்போது தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய ஜோடிகளில் ஒன்றாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.

From Around the web