அனல்பறக்கும் ஜெயிலர் ‘ஷோகேஸ்’ இதோ..!

 
1

ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Jailer

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகியுள்ள இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த மாதம் 6-ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியது. அதேபோல் கடந்த மாதம் 17-ம் தேதி ஹுக்கும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஷோகேஸ் இன்று (ஆகஸ்ட் 2) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில் ஓட்டு மொத்த ரசிகர்களுக்கும் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மரண மாஸ் ஸ்டைலில் ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லராக ஜெயிலர் ஷோகேஸ் வீடியோ தற்போது வெளியானது. இந்த மிரட்டலான ஜெயிலர் ஷோகேஸ் வீடியோ இன்னும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது.

From Around the web