மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவான அதர்வா முரளி..!

 
அதர்வா முரளி

இயக்குநர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் அதர்வா முரளி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கிரைம் த்ரில்லர் படங்களை இயக்கி தனி முத்திரை பதித்தவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் வெளியான ஏறக்குறைய அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. தற்போது பிசாசு- 2 என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் அதர்வா முரளி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூரப்படுகிறது. இந்த படமும் கிரைம் த்ரில்லர் வகையில் உருவாகும் படமாக தயாராகவுள்ளதாக தெரியவந்துள்ளது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

From Around the web