இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு விரைவில் திருமணம் ?

 
1

இந்தியாவில் புகழ்பெற்ற நடிகையும், தன் பேச்சால் சர்ச்சையில்  சிக்குபவருமான் நடிகை கங்கனா ரனாவத்,விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். 

இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துள்ள இவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் வெளியான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கங்கனா, நான் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும், ஒரு தாயாகவும் இருப்பேன். நான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும், அது குறித்து அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். 

From Around the web